இசையின்றி நாட்கள் விடிவதில்லை! நடிகர் விவேக் பகிர்ந்த எஸ்.பி.பியின் அரிய புகைப்படம்! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!

by Web Team
0 comment

எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள். கொரோனோ தொற்றால் கடந்த மாதம் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரது உடல் அரச மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக், இந்த விரலில் விளைந்த மெட்டுக்கள்! அந்த குரலில் குழைந்த பாட்டுகள்! இந்த பயணங்கள் முடிவதில்லை, இசையின்றி நாட்கள் விடிவதில்லை என பதிவிட்டு எஸ்.பி.பி அவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியுடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் இத்தகைய புகைப்படத்தை தற்போது பகிர்ந்ததற்கு நடிகர் விவேக்கிற்கு நன்றி கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Comment