“வா… வந்து பாரு” கொரோனாவுக்கு சவால் விட்ட தம்பதிகள்..!? வைரல் போட்டோ

by Web Team
0 comment

கொரோனாவை தடுக்க வேண்டும் என்றால் தற்போதையை ஆயுதம் முகக் கவசம்தான் என உலக சுகாதார நிறுவனமே சொல்லி விட்டது. பல நாடுகளும் முகக் கவசத்தை கட்டாயமாக்கி விட்டன.

முகக் கவசம் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என பல நாடுகள் அறிவித்து, அரசின் கஜானாவுக்கு புதிய வருமானத்தை தேடிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இந்த தம்பதிகளின் சவால் கொரோனாவுக்கா ? அரசுக்கா என குழம்பிப் போகும் அளவுக்கு உள்ளது.

மூக்கையும், வாயையும் மட்டும் மூடினால் போதுமா ? என கொரோனாவுக்கே சவால் விடும் வகையில் உடம்பு முழுவதும் முகக் கவசங்களால் தயார் செய்யப்பட்ட உடையை அணிந்துள்ளனர்.

சர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் ஒரு முறை அணியும் மாஸ்கை கொண்டு உடல் முழுவதும் மூடியுள்ளனர். போதாக்குறைக்கு அந்த பெண்மணி தன் கைப்பையையும் மாஸ்க் கொண்டு மூடியுள்ளார்.

இது வேடிக்கைக்காக செய்தார்களா அல்லது விழிப்புணர்வுக்கா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் இவர்கள் விடும் சவால் அரசுக்கா ? கொரோனாவுக்கா என்பதும் தெரியவில்லை என பார்ப்பவர்கள் கேள்வி கேட்கலாம். இத்தனை மாஸ்கையும் இவர்கள் வீணடிப்பதற்கு பதிலாக யாருக்காவது கொடுத்திருக்கலாம் எனவும் நாம் நினைக்கலாம். ஆனால், இப்படி உடம்புக்கே மாஸ்க் மாட்டியதால்தான், உலகம் முழுவதும் இந்த தம்பதிகள் வைரலாக பரவி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment