தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா உறுதி!

by Web Team
0 comment

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதியாகியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா உறுதியானது. வழக்கமான பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்ததாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில் விஜயகாந்த் குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. விஜயகாந்த்க்கு கொரோனா உறுதியான உடனே, அவரது வீட்டில் இருந்த எல்லாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

அந்த வகையில் விஜயகாந்த்தை உடனிருந்து கவனித்துக் கொண்ட பிரேமலதாவுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரேமலதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால் அவர் உடனடியாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் உடல்நலம் குன்றியதில் இருந்து, பிரேமலதா தான் கட்சியின் அனைத்து பணிகளையும் தலைமையேற்று நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment