அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்

by Web Team
0 comment

நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் பிளேட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக வதந்திகளுடன் யாரும் வரமாட்டாங்கனு நம்புறேன்”.என லட்சுமி மேனன் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த காட்டமான பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை விமர்சித்தனர். பிளேட்டுகள், கழிப்பறையை கழுவுவது கேவலமான விஷயமா என்று கேள்வி எழுப்பி, அவரைப் கடுமையாக சாடினர்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். உனக்கு பிளேட்டு கழுவுவது, கழிப்பறைகளைக் கழுவுவது கேவலமா இருக்கா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். என்னை கேள்வி கேட்க நீங்க யார்? அனைத்துமே என்னுடைய விருப்பம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சி சிலருக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம்.

எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் அங்கு போகவில்லை. என் வீட்டில் நான் உபயோகிக்கிற பிளேட்டுகள், கழிப்பறைகளை நான்தான் சுத்தம் செய்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்குப் போய் அதைச் செய்ய நான் விரும்பவில்லை. கேமரா முன்பு மற்றவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு, பிளேட்டுகள், கழிப்பறைகளைக் கழுவுவது எல்லாம் எனக்கு தேவையில்லை. என்னிடம் பிக் பாஸ் போறீங்களானு கேட்கும்போது, கஷ்டமா இருக்கு. மற்றவர்களின் விருப்பத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்”. என்று லட்சுமி மேனன் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment