ஐபிஎல்: அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்

by Web Team
0 comment

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 7-ஆவது லீக் ஆட்டத்தில், தில்லி கேப்பிட்டல்ஸ் அணியினா் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியினரைத் தோற்கடித்தனா். லீக் ஆட்டங்களில் சென்னை அணியினருக்கு இது இரண்டாவது தோல்வியாகும். ஏற்கெனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருடனான ஆட்டத்திலும் சென்னை அணியினா் தோல்வியடைந்தனா்.

முதலில் களமிறங்கிய தில்லி அணியினா் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தனா். அடுத்து பேட் செய்த சென்னை அணியினா் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தனா்.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் 43 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். டுபிளெசிஸ் 3 ஆட்டங்களில் 173 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் ஆரஞ்சு தொப்பி அவர் வசம் உள்ளது. 153 ரன்களுடன் ராகுல் 2-ம் இடத்திலும் 115 ரன்களுடன் மயங்க் அகர்வால் 2-ம் இடத்திலும் உள்ளார்கள்.

பந்துவீச்சாளர்களில் 5 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் தில்லி வீரர் ரபாடா. சாம் கரண் 5 விக்கெட்டுகளுடன் 2-ம் இடத்திலும் சமி 4 விக்கெட்டுகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளார்கள்.

Related Posts

Leave a Comment