அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.

by Web Team
0 comment

அஜித்தின் முதல் படம் அமராவதி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பு பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடித்தார் அஜித். அதுதான் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் படம். இந்தப் படத்தில் அஜித் நடிப்பதற்கு முக்கியக் காரணம், எஸ்.பி.பி. அதுமட்டுமல்லாமல் தமிழிலும் அஜித்தின் அறிமுகத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறார். ஓர் இளமையான காதல் படத்துக்கு இளம் கதாநாயகனைப் பரிந்துரை செய்யுமாறு அமராவதி இயக்குநர் செல்வா, எஸ்.பி.பி.யிடம் கேட்டுள்ளார். அஜித் பற்றியும் தெலுங்குப் படம் பற்றியும் செல்வாவிடம் எஸ்.பி.பி. கூற, இதன்மூலமாகவே அமராவதி படத்தின் கதாநாயகன் ஆனார் அஜித்.

நடிகர் பாஸ்கிக்கு அளித்த ஒரு பேட்டியில் அஜித் பற்றி எஸ்.பி.பி. பேசியதாவது:

அஜித்தும் சரணும் பள்ளித்தோழர்கள். வீட்டுக்கெல்லாம் வருவார். அவர் பார்க்க நன்றாக இருப்பார். 16,17 வயதில் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல சட்டை வேண்டும் என்று சரணின் சட்டையை வாங்கிச் சென்றார். அது என் நினைவில் இருந்தது.

அப்போது அவர் வளர்ந்து கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார். கொல்லபுடி மாருதி ராவ் சார் ஒரு படம் எடுத்தார். அவர் மகன் தான் இயக்குநர். அழகான, நல்ல தோற்றம் கொண்ட புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். எனக்கு அஜித் ஞாபகம் தான் வந்தது. என் மகனின் வகுப்புத் தோழன் ஒருவன் இருக்கிறான். பார்க்கிறீர்களா என்று சொன்னதும் அந்த வாய்ப்பை அஜித்துக்கு வழங்கினார் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment