கடந்த ஜூன் மாதம் முதல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக தேவஸ்தானம் இணையதளம் மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன் படி அக்டோபர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுக்கள் இன்று காலை வெளியிடப்பட்டது.
தற்போது தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.