நாசூக்காக வாழ்வது எப்படி?

by Web Team
0 comment

எப்பொழுதும் புன்முறுவலோடு மென்மையாக பேசுங்கள்..

உங்களை கஷ்டப்படுத்தி பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் கம்பீரமாக நடந்து செல்வது ஒரு தனி சுகம் தான்…

கோபம் நெருப்பை கையில் தாங்குவதற்கு சமம்.. அது முதலில் உங்களைத்தான் சுடும்

உங்கள் பேச்சுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் உங்கள் பேச்சை குறையுங்கள். உங்கள் மௌனத்திற்கு மதிப்பு அதிகமாகும்.

ஒருவனை மட்டம் தட்டுபவன்…அவன் பலரால் மட்டம் தட்ட படுகிறான்

உங்கள் செயலில் நோக்கத்தை யாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.. உங்கள் நல்ல விரும்பிகளுக்கு அது தேவையும் இல்லை… உங்களை வெறுப்பவர்கள் அதை நம்பவும் மாட்டார்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்…

உங்கள் ஆக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் முற்றுகையிடும் நட்புகளையும் ,உறவுகளையும் சிறிதும் யோசிக்காமல் விட்டு விலகி விடுங்கள்…

பிறரின் தேவையற்ற உதாசீன பேச்சுக்களையும் காதில்போட்டுக் கொள்ளாதீர்கள். நாய் குறைக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்களைத் தவிர வேறு எவர் மீதும் முழு நம்பிக்கை வைக்காதீர்கள்… மனம் மாறும். மனிதர்கள் மாறுவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

ஒருவரின் எண்ணங்கள் அவர் பேச்சில் தெரியும்..ஒருவனின் குணம் அவன் மற்றவர்களை நடத்தும் விதத்தில் தெரியும்..

ஒருவன் நான்தான் என்று தற்பெருமை பேசினால் .”ஆமாம் சாமி” என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுங்கள்… சிறிதும் யோசிக்காமல்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது.அது உங்கள் வேலையும் கிடையாது. உங்கள் வேலையை திறம்பட செய்யுங்கள் அதுவே போதுமானது..

பூச்சியை பறவை சாப்பிடுகிறது. பறவையை பாம்பு சாப்பிடுகிறது. பாம்பை பருந்து சாப்பிடுகிறது. மருந்தை வயோதிகம் சாப்பிடுகிறது.எனவே “நான் தான் பெரியவன்” எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற கருத்தை முதலில் விட்டொழியுங்கள்.

பாம்பு இரவில் இரை தேடி அலையும் பொழுது தவளை நான் இங்கதான் இருக்கேன் என்று கத்தி கூப்பாடு போடும்மாம்.. சில சமயங்களில் நாவை அடக்கி வைப்பது நல்லது.

குரங்கு வேகமாக மரம் ஏறும் மீன் தண்ணீரில் வேகமாக நீந்தும். மீனை குரங்குடன் ஒப்பிட்டு இந்த’ மீன் வேகமாக மரம் ஏறுமா’? என்று கேட்பது முட்டாள்தனம்.
அதனால் உங்களை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.. நாம் மனிதர்கள் என்ற பெயரால் ஒன்று பட்டாலும், நாம் நம்முடைய சிந்தனைகள் செயல்கள் மற்றும் திறமைகளால் வேறுபடுகிறோம். என்பதை உணருங்கள்..

தவறான நண்பர்களுடன் இருப்பதைவிட தனிமையாக இருப்பது மேல் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..

ஒருவன் உங்களை முகத்தின் முன்னே புகழ்ந்து கொண்டே இருந்தால் .அவன் உங்களுக்கு முதுகுக்குப் பின்னால் குழி தோன்றுகிறான் என்று அர்த்தம்.
மற்றவரின் சுமையைச் யாராலும் அறிய முடியாது ..உங்களுடைய குறையை எல்லாரிடமும் கூறிக் கொண்டே இருக்காதீர்கள்.

ஒருவனுக்கு தீங்கு செய்பவன் அதை அனுபவிப்பவன் விட அவனுக்கு மன உளைச்சல் அதிகமாகும்..

சந்தோஷத்தில் இருக்கும் பொழுது யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். கோபத்தில் இருக்கும்போது வார்த்தையை வெளியே விடாதீர்கள். இது உங்களை பல தர்மசங்கடம் இருந்து பாதுகாக்கும்…

ஒரு விஷயத்தை செய்து காட்டுகிறேன். என்று சொல்வதை விட செய்து காட்டுங்கள் உங்கள் மீது மதிப்பு அதிகமாகும்..

முட்டாள்தனமாக பேசுபவன் இடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர பெரிய முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை..

இந்த உலகத்தில் பிறரை திருத்துவதற்கு முன்னால் நம்மை நாமே திருத்திக் கொள்வோம்.. அல்லது திருத்திக் கொள்ள முயற்சி செய்வோம். நாம் நம்முடைய சிந்தனைகளை வலுவாக்கி கொண்டால் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கடந்து செல்லும் தைரியம் நமக்கு வந்து விடும்.. இது உங்கள் வாழ்க்கை படகை சிறந்த வழியில் செலுத்த உதவும்.

Related Posts

Leave a Comment