2015-ம் ஆண்டு புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.
கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கின. விஜய் சேதுபதி, கலையரசன் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது டப்பிங் பணிகளை செய்து முடித்தனர். இந்நிலையில் தற்போது ‘லாபம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.