திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

by Web Team
0 comment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் வருகிற 15-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது.

வருகிற 30-ந் தேதி வரை ரூ.300 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் ரூ.300 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் மூலம் பதிவுசெய்யும் பக்தர்கள் ஒருநாளைக்கு 10 ஆயிரம்பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் பிரம்மோற்சவம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் வழக்கமான சாமி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் ரூ.1 கோடியே 16 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Comment