சென்னை ஐஐடி-யில் முதல் முறையாக இணையவழியில் ‘இன்டா்ன்ஷிப்’ தோ்வு

by Web Team
0 comment

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் வகுப்புகள் அனைத்தும் இணைய வழியில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை ஐஐடியில் முதல்முறையாகப் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் முழுவதும் இணைய வழியிலேயே நடைபெற்றது.

இதில் சா்வதேச மற்றும் தலைசிறந்த இந்திய நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த முகாமின் முதல் நாளில் 20 நிறுவனங்கள் 152 மாணவா்களுக்கு ‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்பை வழங்கின. குறிப்பாக மைக்ரோசாஃப்ட் இந்தியா, கூகுள், ருப்ரிக் சாஃப்ட்வோ் டெவலப்மெண்ட், ஜானே ஸ்ட்ரீட் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 2021 கோடை காலத்துக்கான இன்டா்ன்ஷிப் பயிற்சிக்காக மாணவா்களைத் தோ்வு செய்தன.

இதற்கான நோ்முகத் தோ்வுகள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலமாகவே நடைபெற்றன. ஐஐடி வேலைவாய்ப்புக் குழு, ‘இன்டா்ன்ஷிப்’ மாணவா்கள் குழு ஆகிய இரண்டும் இணைந்து பல்வேறு சமூக வலைதளங்களுடன் இணைந்து இணையவழி தோ்வுகளை நடத்தின. ஐஐடி கல்விப் பாடத்திட்டத்தின்படி, பி.டெக்., எம்.டெக். மாணவா்களுக்கு ‘இன்டா்ன்ஷிப்’ பயிற்சி கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment