தெறிக்க விடும் பாடலின் ப்ரோமோ, ஜெயம் ரவி – அனிருத் கூட்டணி !!

by Web Team
0 comment

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தில் ஜோடியாக நிதிஅகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர்.

“பூமி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்தார். பாடலின் ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா? என்ற இந்த பாடலின் சின்ன வீடியோவையும் டி.இமான் வெளியிட்டார். செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த பாடலை பாடியது அனிருத் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் அட்டகாசமான குரலில் இந்த பாடல் சூப்பர்ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment