ஜிடிபி-யின் வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது: ரகுராம் ராஜன்

by Web Team
0 comment

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டும் வகையில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி லிங்க்ட் இன் பக்கத்தில் ரகுராம் ராஜன் தெரிவித்திருப்பதாவது:

“சமீபத்தில் வெளியிடப்பட்ட 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அனைவரையும் அச்சமூட்டும் வகையில் உள்ளது. முறைசாரா துறையில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டால், ஜிடிபி 23.9 சதவிகித வீழ்ச்சியைக் காட்டிலும் மோசமானதாக இருக்கும். கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான அமெரிக்காவிலும், இத்தாலியிலும்கூட முறையே 9.5 சதவிகிதமும், 12.4 சதவிகிதமும்தான் வீழ்ச்சியடைந்துள்ளன.

தற்போதைய சூழலில் அரசினுடைய நிவாரணம் மிகவும் முக்கியமானது. எனினும், அரசு இதுவரை அளித்த உதவிகள் என்பது மிகவும் சொற்பமானது. முதன்மையாக ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு கடன் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள வளங்களைக் கூடுதலாக செலவிட அரசு தற்போது தயக்கம் காட்டுகிறது. ஆனால், இந்த யுத்தி தன்னைத் தானே தோற்கடிப்பதாகும்.”

Related Posts

Leave a Comment