ஐக்கிய அரபு அமீரக சீதோஷ்ண நிலை ஏறக்குறைய இந்தியாவை போன்றதுதான் – புவனேஷ்வர் குமார் சொல்கிறார்

by Web Team
0 comment

இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். புதுப்பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். மேலும், டி20 போட்டியில் நக்குல் பால், ஸ்லோவர் ஒன், யார்க்கர் என பலவிதமான பந்துகளை வீசி அசத்தக்கூடியவர். இதனால் டி20 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சை எதிர்கொள்ளவது அவ்வளவு சுலபம் அல்ல.

தற்போது துபாய், ஷார்ஜா, அபு தாபி சீதோஷ்ண நிலை எப்படி இருக்கும் என்பதுதான் பந்து வீச்சாளர்களின் ஒரே கேள்வி.

இந்நிலையில் ஏறக்குறைய இந்தியாவை போன்ற சீதோஷ்ண நிலைதான் ஐக்கிய அரபு அமீரகத்திலும் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘டெக்னிக்கலாக அதிக அளவில் மாற்றம் செய்து கொள்ள வேண்டியதில்லை. இங்குள் சீதோஷ்ண நிலை இந்தியாவை போன்றுதான் உள்ளது. ஒரே விசயம் நாம் இந்தியாவில் 8 மைதாங்களில் விளையாடினோம். இங்கு மூன்று மைதானம். சீதோஷ்ண நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். தொடரின் 2-வது பாதி நேரத்தில் ஆடுகளம் சற்று ஸ்லோவர் ஆகும்.

நாங்கள் நீண்ட வருடங்களாக குறைந்த அளவில் ஸ்கோர் அடித்து எதிரணிகளை அதற்குள் கட்டுப்படுத்தியுள்ளோம். இதுதான் எங்கள் அணியில் பலம். இனிமேலும் அதுபோன்று செய்ய இயலும் என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் அதை செய்ய விரும்பிறோம்’’ என்றார்.

Related Posts

Leave a Comment