கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம்: செப்டம்பர் 30

by Web Team
0 comment

கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 புகார்கள் வந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் கட்டணம் வசூலித்த 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Related Posts

Leave a Comment