நடிகை மஞ்சிமா மோகன் பற்றி தெரியாத சுவராசியமான விசயங்கள்.

by Web Team
0 comment

மஞ்சிமா மோகன்

இயற்பெயர்:பிரியதர்ஷினி

பிறந்த நாள்:11-மார்ச்-1993

பிறந்த ஊர்:திருவனந்தபுரம்,கேரளா.

(1)இவர் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக 1997-ல் “கலியூஞ்சல்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இதனை சேர்த்து மொத்தம் 7 மலையாள படங்களில் நடித்திருக்கிறார் .

(2)2015-ல் “ஒரு வடக்கன் செல்பி” படத்தின் மூலம் மலையாளத்திலும் 2016-ல் “அச்சம் என்பது மடமையடா” படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

(3)”அச்சம் என்பது மடமையடா” படத்தின் தெலுங்கு பதிப்பான “சாஹசம் ஸ்வாசக சாகிப்போ”-வில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார்.

(4)நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பை பார்த்து வியர்ந்து இருப்பதாகவும் அவருடன் நடிப்பதற்கு ஆர்வத்தோடு இருப்பதாகவும் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

(5)இவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகிகள் அனுஷ்கா,த்ரிஷா மற்றும் நயன்தாரா .

(6)திரையுலகிற்கு வந்த புதிதிலேயே தன் படங்களில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் A.R ரஹ்மான் இசையமைப்பில் நடித்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று அதே நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

(7)இவர் ஒரு உணவு பிரியையாக(Foodie) இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் உடல் எடையை குறைத்து அல்லது கூட்டி நடிப்பதாக அவரே கூறியுள்ளார்.

(8)2014-ல் ஹிந்தியில் கங்கனா ரணாவத் முதன்மை பாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “குயின்”.இந்த படத்தின் மலையாள பதிப்பான “சம் சம்”(Zam Zam)-ல் கங்கனா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தை இவர் நடித்திருக்கிறார்.படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related Posts

Leave a Comment