எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது – சீன பாதுகாப்புத்துறை மந்திரியிடம் கராராக கூறிய ராஜ்நாத்சிங்

by Web Team
0 comment

எல்லையை பாதுகாப்பத்தில் இந்திய படையினர் உறுதியாக இருப்பதாக சீன பாதுகாப்புத்துறை மந்திரியிடம் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மாஸ்கோ:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ரஷியா சென்றிருந்தார். அவர் நேற்று முன்தினம் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் சர்ஜெ ஷோய்குவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

எல்லை விவகாரத்தில் சீனாவுடன் மோதல் போக்கு இருந்தவந்த நிலையீல் இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த சீன பாதுகாப்புத்துறை மந்திரியை ராஜ்நாத் சிங் சந்திப்பாரா? என்பதில் குழப்பம் நிலவி வந்தது.

ஆனால், ராஜ்நாத்சிங்கை சந்திக்க வேண்டும் என சீன ராணுவ மந்திரி தரப்பில் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற இந்தியா இரு நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த சம்பதம் தெரிவித்தது.

இதையடுத்து, இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி மற்றும் சீன பாதுகாப்புத்துறை மந்திரி விய் பென்ஹி இடையே இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரிகளும் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியது தொடர்பாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிடுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது:-

* கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட எல்லை பகுதிகளில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக சீனாவிடம் எடுத்துரைக்கப்பட்டது.

* சீன படையினரின் குவிப்பு, அவர்களின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், மேலும் உண்மையான எல்லைப்பகுதியை தன்னிச்சையாக மாற்றியமைக்க முயற்சிப்பதும் இரு நாட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல்.

* எல்லை மேலாண்மையை பொறுத்தவரை இந்திய படையினர் எப்போதுமே பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அதேசமயம் இந்திய எல்லைகளையும், நாட்டின் இறையான்மையையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

* எல்லையில் அமைதியை பேணுவது தொடர்பாக இரு தரப்பினரும் இரு நாட்டு தலைவர்களின் கருத்துக்களை பின்பற்ற வேண்டும். இரு நாட்டு உறவும் மேம்படுவதற்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம். இரு தரப்பு முரண்பாடுகள் மோதலை ஏற்படுத்த அனுமத்க்கக்கூடாது.

* இரு நாட்டு ஒப்பந்தத்தின் படி பிங்யாக் லேக் மற்றும் பிற எல்லைப்பகுதிகளில் இருந்து படைகளை முழுவதும் விலக்கிக்கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து சீனா செயல்பட வேண்டும்.

* தற்போதைய நிலைமையை இரு நாடுகளும் பொறுப்புடன் கையாள வேண்டும். எந்த ஒரு தரப்பும் இனி மேலும் ஒரு நடவடிக்கை எடுத்தாலும் அது நிலைமையை மோசமடையச்செய்துவிடும் அல்லது எல்லையில் பதற்றத்தை அதிகரித்துவிடும்.

* எல்லையில் இருந்து சீன படைகளை விரைவாக வெளியேற்றி பதற்றத்தை தணித்து அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியினான பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெற்கொள்ள வேண்டும்.

என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment