கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால்தான் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி- வழிகாட்டு நெறிமுறையில் திட்டவட்டம்

by Web Team
0 comment

நாடாளுமன்றம் மழைக்காலக் கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டுமென்றால் கரோனா வைரஸ் இல்லை என்ற ‘நெகட்டிவ்’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14ம் தேதி நாடளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதனையடுத்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களவையும், ராஜ்யசபாவும் வெளியிட்டுள்ளது. இதற்காக ஐசிஎம்ஆர் இந்த வழிமுறைகளை தயாரித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வு தொடங்குவதற்கு 72 மணி நேரம் முன்பாக கரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம். அதுவும் கரோனா பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால்தான் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

எம்.பி.க்களிடம் பணியாற்றுவோர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா பாசிட்டிவ் என்று இருந்தால் கூட எம்.பி.தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

அதே போல் இரு அவைகளிலும் விவாதங்களில் ஈடுபட்டாலும் முகக்கவசம் அவசியம் அணிந்திருக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து முடியும் வரை எம்.பி.க்கள் வெளியே சென்று வரக்கூடாது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குத் தேவையான ஆவணங்களுக்கும் அனுமதியில்லை, நகல்கள் மின்னணு முறையில்தான் அனுப்பப்படும். அதே போல் தேவையில்லாமல் உறுப்பினர்கள் யாரும் எந்த ஒருவரையும் கூட்டத்தொடருக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும்.

நாடாளுமன்ற கேன்டீனில் பேக் செய்யப்பட்ட உணவு, தேநீர், காஃபி ஆகியவற்றை வழங்கும் இதுவும் யூஸ் அண்ட் த்ரோ கன் டெய்னர்களில் மட்டுமே தரப்படும்.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment