கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியா?- வசந்தகுமார் மகன் பதில்

by Web Team
0 comment

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதியில் மறைந்த எம்பி வசந்த குமாரின் மகன் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

புதுடெல்லி:

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், 6 மாதங்களுக்குள் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியலில் விருப்பம் இருப்பதாக கூறி உள்ள விஜய் வசந்த், தற்போதைக்கு போட்டியிட விரும்பவில்லை என கூறியிருக்கிறார்.

நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அப்பாவின் நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், காங்கிரஸ் உறுப்பினரான நான் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செய்வேன் என்றும் விஜய் வசந்த் கூறினார்.

Related Posts

Leave a Comment