தமிழக அரசு ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி: நாளை முன்பதிவு தொடங்குகிறது

by Web Team
0 comment

தமிழக அரசு ரெயில் போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், நாளை முன்பதிவு தொடங்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 7.9.2020 (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரெயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தற்போது 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரெயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை தமிழக ரெயில் டிக்கெட் கவுண்டர்கள், முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்றும், நாளை முதல் முன்பதிவு தொடங்கும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment