பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்

by Web Team
0 comment

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார்.

தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் தொடங்க உள்ளது. இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர்.

ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் அவருக்கு சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் 2 எபிசோடுகளை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிக்பாஸ் 4-வது சீசன் முதல் 6-வது சீசன் வரை ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வாங்கினார். 7-வது சீசனில் இது ரூ.5 கோடி ஆனது. 2015-ல் எட்டு கோடியாகவும் பின்னர் ரூ.11 கோடியாகவும் உயர்த்தினார்.

தற்போது ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடியே 50 லட்சமாக உயர்த்தி உள்ளார். கொரோனா ஊரடங்கில் திரையுலகம் முடங்கிய நிலையிலும் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை வாங்குகிறார். படத்தின் வசூலிலும் அவருக்கு பங்கு கொடுக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment