ரிஷிகேஷ் பாலத்தில் நிர்வாண வீடியோ எடுத்த விவகாரம்- மன்னிப்பு கோரினார் பிரான்ஸ் பெண்

by Web Team
0 comment

ரிஷிகேஷில் அரை நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பிரான்ஸ் பெண் மன்னிப்பு கோரி உள்ளார்.

புதுடெல்லி:

ரிஷிகேஷில் உள்ள கங்கை நதி மீது அமைந்துள்ள லட்சுமண் ஜூலா என்ற தொங்கு பாலம் இந்துக்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. பிரான்சைச் சேர்ந்த மேரி-ஹெலன் என்ற 27 வயது பெண் இந்த பாலத்தின் மீது நின்றுகொண்டு, தன்னைத்தானே நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில் மேரி-ஹெலன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், நான் அந்த வீடியோவை எடுக்கும் போது என்னை சுற்றி யாருமே இல்லை. நாட்டில் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படி செய்தேன். நான் ஆன்லைனில் நகைகள் விற்பனை செய்கிறேன். என் நகைத் தொழிலை இணையத்தில் பிரபலப்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாறு செய்தேன்.

ஆனால் நான் ஆடையின்றி முழு நிர்வாணமாக வீடியோ எடுத்ததாக கூறுவது தவறு. எனினும் ரிஷிகேஷில் பக்தர்கள் மனம் புண்படும் படி நடந்துகொண்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்’ என்றார்.

Related Posts

Leave a Comment