பிரதமர் மோடியின் பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாடும் பாஜக

by Web Team
0 comment

பிரதமர் மோடியின் பிறந்தநாளை பல்வேறு நலத்திட்ட பணிகளுடன் சேவை வாரமாக பாஜக கொண்டாட உள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம் 17-ம்தேதி கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் செப்டம்பர் 14 முதல் 20 ம் தேதி வரையில் ஒரு வாரம் சேவா சப்தா அல்லது சேவை வாரமாக கொண்டாடப்பட உள்ளது.

அந்த வாரம் முழுவதும் கட்சியினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட உள்ளனர்.

Related Posts

Leave a Comment