8 வயசு பொண்ணு.. பையன் வயசு 16.. காட்டுக்குள்ள அட்டூழியம்.. மிரண்டு போன கோவை!

by Web Team
0 comment

கோவை: பையன் வயசு 16.. பொண்ணு வயசு 8… காட்டுக்குள்ள நடந்த அட்டூழியத்தை நினைத்து கோவையே மிரண்டு கிடக்கிறது! கோவை சேரன் மாநகர் பகுதியில் வசித்து வருபவர் அந்த கூலி தொழிலாளி… இவர் ஆடுகளையும் வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்.. அந்த ஆடுகளை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இவரது மகளுக்கு 8 வயசுதான் ஆகிறது.. அங்குள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இப்போது லாக்டவுனில் ஸ்கூல் லீவு என்பதால் வீட்டில் இருந்திருக்கிறாள்.. சம்பவத்தன்று, வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்றாள். அப்போது 16 வயசு சிறுவன் அங்கு வந்துள்ளான்.. காட்டுக்குள் யாருமே இல்லாததை பார்த்ததும், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை தந்திருக்கிறான்.. அவனிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு வந்து நடந்ததை எல்லாம் பெற்றோரிடம் சொன்னாள். குழந்தை சொல்வதை கேட்டு அதிர்ந்த பெற்றோர் 16 வயது சிறுவன் மீது பீளமேடு ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர். அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஊரடங்கில் வீட்டிலுள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. வயசான கிழவிகளையே விட்டுவைக்காத காமுகர்கள் குழந்தைகளை எப்படி விட்டு வைப்பார்கள்? பெற்றோர்கள்தான் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்!

Related Posts

Leave a Comment