“பன்ச்” பேசி தெறிக்கவிடும் தோனி… சிஎஸ்கே பகிர்ந்த மாஸ் வீடியோ!!!

by Web Team
0 comment

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

கேப்டன்ஷிப்பிலும், பேட்டிங்கிலும் மட்டும் அசத்தும் திறன் கொண்டவர் அல்ல மகேந்திர சிங் தோனி. அதிரடி ‘பன்ச்’கள் கொடுப்பதிலும், முதிர்ச்சியடைந்த அட்வைஸ் கொடுப்பதிலும் பெயர் போனவர். இப்படி தோனி, பல்வேறு சமயங்களில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றியான வீடியோ தொகுப்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தோனி ரசிகர்களுடன் பேசும் வீடியோவில், “ஞானம் என்பது உங்கள் பெயரோடு ஒட்டியிருந்தால்…” எனக் கருத்திட்டு அந்த வீடியோ பகிரப்பட்டது. காணொலியில் தோனி, அதிரடி பன்ச் டயலாக்குகள் பேசுகிறார், வாழ்க்கைக்கான அறிவுரை வழங்குகிறார், சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்… இன்னும் பற்பல.

கடந்த சனிக்கிழமை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். 15 ஆண்டுகள் நீண்ட அசாத்திய கிரிக்கெட் வாழ்க்கைக்கு, முற்றுப்புள்ளி வைத்தார் தோனி.

அவர், இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி, தோனிக்கு உருக்கமான கடிதம் எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடி, “புதிய இந்தியாவின் முகமாக இருக்கிறார் தோனி” எனப் புகழாரம் சூட்டினார்.

இந்தியாவுக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 50.57 சராசரியில் 10,773 ரன்கள் குவித்துள்ளார். 10 சதங்களையும், 73 அரைசதங்களையும் அவர் விளாசியுள்ளார்.

அதேபோல இந்தியாவுக்காக 98 டி20 போட்டிகளில் பங்கெடுத்து, 37.60 சராசரியில் 1,617 ரன்கள் குவித்துள்ளார் தோனி.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸை முன்னின்று வழிநடத்த உள்ளார் தோனி.

Related Posts

Leave a Comment