“ஜனவரி மாதம் குழந்தை பிறக்கிறது!”: விராட் – அனுஷ்கா சொன்ன குட் நியூஸ்

by Web Team
0 comment

2017 ஆம் ஆண்டு விராட் – அனுஷ்காவுக்கு திருமணம் நடந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் முதல் குழந்தை பிறக்க இருக்கிறது. இது குறித்த தகவலை கோலி, தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். விராட் கோலி, தன் ட்விட்டர் பக்கத்தில், “இனி நாங்கள் மூன்று பேர். ஜனவரி 2021 ஆம் ஆண்டு புது வரவு” என்று கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு விராட் – அனுஷ்காவுக்கு திருமணம் நடந்தது.

ஐபிஎல் தொடரின் 13வது சீசனுக்காக கோலி தற்போது துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினருடன் தங்கியுள்ள கோலி, ஐபிஎல்-க்காக தயாராகி வருகிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கோலியின் ஆர்சிபி அணி, கடைசி இடத்தில் முடித்தது. இந்த முறை அதை மாற்றிக் காண்பிக்கும் முனைப்பில் இருக்கிறது பெங்களூர் அணி.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், போட்டியை வெளிநாட்டில் நடத்த முடிவெடுத்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ.

செப்டம்பர் 19 ஆம் தேதி, ஐபிஎல் 2020 ஆரம்பிக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போதே ஆர்சிபி அணியினர், துபாயில் குவாரன்டீனில் உள்ளனர்.

ஆர்சிபி அணிக்கு, சென்ற ஆண்டு தொடரில் டெத் பவுலிங் மிகப் பெரும் பிரச்னையாக இருந்தது. அதை சரிகட்டும் வகையில் உடானா, மோரிஸ், ரிச்சர்ட்சன் மற்றும் ஸ்டெயின் போன்ற பவுலர்களை களமிறக்க உள்ளது.

அதேபோல சாஹல், நவ்தீப் சயினி, ஷபாஸ் நதீம், பவண் நேகி, மொயின் அலி போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த முறை ஆர்சிபிக்கு பெரும் பலமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment