கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

by Web Team
0 comment

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதன்காரணமாக சில எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்தார். கடந்த 10-ந்தேதி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Related Posts

Leave a Comment