உங்களுக்காகத்தான் அமெரிக்க பணிகள் என்பார், ஆனால் அனைத்தையும் சீனாவுக்கு கப்பலில் ஏற்றி விடுவார்: ஜோ பிடன் மீது ட்ரம்ப் ஆவேசத் தாக்கு

by Web Team
0 comment

இன்னொரு 4 ஆண்டுகள் வெள்ளை மாளிகையில் அதிபராக வலம் வர முயற்சி செய்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரை பேரழிவு துரோகத்தை இழைப்பவர் என்று வருணித்துள்ளார்.

ஜோ பிடன் வெற்றி பெற்றால் அது அமெரிக்காவுக்கே பெரிய ஆபத்தாக முடிந்து அமெரிக்க மகத்துவத்தை அழித்து விடும் என்று தடாலடியாகப் பேசியுள்ளார்.

பிடன் நிர்வாகத்தில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று ட்ரம்ப், மீண்டும் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டு பேசிய போது ட்ரம்ப் தெரிவித்தார்.

“ஜோ பிடன் அமெரிக்க ஆன்மாவை மீட்பவர் அல்லர். அமெரிக்க வேலைகளை அழிப்பவர். வாய்ப்பு கொடுத்தால் அமெரிக்க மகத்துவத்தையே அழித்து விடுவார்.

நாம் ஆயுட்காலத்தில் சந்தித்திராத பேரழிவான துரோகங்களுக்குரியவர் என்பது பிடனின் வரலாறு. வரலாற்றில் தவறான பக்கத்தில் அவர் காலம் முழுதும் இருந்து வருகிறார்.

நாஃப்தா என்ற நார்ட் அமெரிக்கன் சுதந்திர வாணிப ஒப்பந்தம் என்ற பேரழிவுக்கு வாக்களித்தார், அது மிக மோசமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஆகும். சீனாவை உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா வருவதை ஆதரித்தார். இது அனைத்து கால பேரழிவைச் சந்தித்துள்ளது. பிடனின் இந்த பேரிடரால் அமெரிக்க உற்பத்தித் துறை வேலைகளில் 4-ல் ஒன்று என்ற விகிதத்தில் பணிகளை இழந்துள்ளது.

அமெரிக்கா இதுவரை சாதித்ததையெல்லாம் பிடன் கையில் அச்சுறுத்தலாகி விடும்.

நம் நாட்டு வரலாற்றில் இந்த தேற்தல் முக்கியமானது. எந்த காலத்திலும் இரு கட்சிகள், இரு பார்வைகள், இரு கொள்கைகள், இரு செயல்திட்டஙளுக்கு இடையே தெளிவான ஒரு தெரிவை அமெரிக்க வாக்காளர்கள் கண்டதில்லை.

அமெரிக்க கனவை காப்பாற்றுகிறோமா அல்லது சோஷலிச ஆட்சியை அனுமதித்து நம் கொண்டாடப்பட்ட இலக்கை அழிக்கப் போகிறோமா. உயர் சம்பள பணிகளை உருவாக்குவதற்கான தெரிவா அல்லது லட்சக்கணக்கான பணிகளை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பதா? இதுதான் பல பத்தாண்டுகளாக முட்டாள்தனமாக நடத்தப்பட்டு வந்தது.

அமெரிக்க மக்களின் வாக்குகள் இந்த முறை சட்டத்துக்கு கட்டுப்பட்ட அமெரிக்கர்களை காக்கப்போகிறதா அல்லது வன்முறையான அராஜகவாதிகளுக்கு சுதந்திரம் அளிக்கப் போகிறதா.

அமெரிக்க வாழ்முறையைக் காக்கும் வாக்களிப்பா அல்லது இதை அழிக்கும் வாக்களிப்பா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

பிடனும் அவரது சகாக்களும் அமெரிக்காவை தொடர்ந்து நிறவெறிபிடித்த நாடு என்கின்றனர் பொருளாதார, சமூக அநீதி நாடு என்று வர்ணிக்கின்றனர்.

ஆகவே இன்று நான் உங்களிடம் ஒரு எளிதான கேள்வியை கேட்கிறேன், நம் நாட்டை எப்போதும் கிழித்துத் தொங்க விடுபவர்களுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்?

இடதுசாரிகளின் பிற்போக்குப் பார்வையில் அமெரிக்காவை அவர்கள் நீதிபூர்வ, சுதந்திர, தனித்துவமான ஒரு நாடாக பார்க்க மாட்டார்கள், மாறாக கொடூரமான ஒரு நாடு அதன் பாபங்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று பார்ப்பவர்கள்.

தங்கள் மூலம்தான் மீட்சி வரும் என்பார்கள் அவர்கள், ஆனால் வரலாறு நெடுகவும் எல்லா அடக்குமுறை இயக்கமும் பேசும் சோர்வூட்டக்கூடிய கீதம் தான் இது.

47 ஆண்டுகளாக ஜோ பிடன் ப்ளூ-காலர் பணியாளர்களிடமிருந்து நன்கொடை பெற்றார். அவர்களின் வலியை உணர்வேன் என்கிறார், ஆனால் வாஷிங்டன் சென்று அவர்கள் பணியை சீனாவுக்கும் பிற தூரதேசங்களுக்கும் கப்பல் ஏற்றி அனுப்புகிறார்.

அமெரிக்கப் பணிகளை அவுட் சோர்ஸ் செய்வதில்தான் அவரது கரியர் உள்ளது. நம் வீரர்களை எப்போதும் முடிவுறா அயல்நாட்டு போர்களில் ஈடுபடுத்துபவர்கள் அவர்கள்.

4 ஆண்டுகளுக்கு முன்பாக நான் தேர்தலில் ஏன் அதிபராக நின்றேன் என்றால் இந்த துரோகத்தை என்னால் சகிக்க முடியவில்லை. வாணிபம், எல்லைகல், அயல்நாட்டுக் கொள்கை, தேசப்பாதுகாப்பில் பிற நாடுகள் சாதகங்கள் பெற பார்த்துக் கொண்டிருக்கும் கரியர் அரசியல் வாதி அல்ல நான்.

ஆகவே தவறிழைக்க வேண்டாம், ஜோ பிடனிடம் ஆட்சியைக் கொடுத்தால் தீவிர இடது சாரியான இவர்கள் போலீஸ் துறையிலிருந்து நிதியை பிடுங்கி விடுவார்கள். அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது.” இவ்வாறு ஆவேசமாகப் பேசினார் ட்ரம்ப்.

Related Posts

Leave a Comment