சுக்கிர ஏகாதசி ; மங்காத செல்வம் தரும் மகாலக்ஷ்மி வழிபாடு

by Web Team
0 comment

சுக்கிர ஏகாதசியில், மகாலக்ஷ்மியையும் மகாவிஷ்ணுவையும் மனதார வழிபடுங்கள். மங்காத செல்வங்களையெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவோம். சுபிட்சம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். சகல செளபாக்கியங்களும் கிடைத்து இனிதே வாழலாம். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். வீட்டில் தடைப்பட்டிருந்த சகல மங்கல காரியங்களும் கோலாகலமாக நடந்தேறும்.

ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கான அற்புதமான நாள். மாதந்தோறும் அமாவாசையை அடுத்தும் பெளர்ணமியை அடுத்தும் ஏகாதசி திதி வரும். இந்தநாளில், விரதமிருந்து பெருமாளை வழிபடுவார்கள் பக்தர்கள்.

மாதந்தோறும் ஏகாதசி திதியில் பெருமாளை நினைத்து விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். இந்தநாளில், காலை முதல் விரதமிருந்து விஷ்ணு சகஸ்ர நாமம் முதலானவற்றை பாராயணம் செய்து வழிபடுவார்கள்.

பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி ஆராதனை செய்வார்கள். காலையும் மாலையும் திருமாலை வழிபாடு செய்து, விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வார்கள். நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவார்கள்.

இதேபோல், சுக்கிரவாரம் என்பது மகாலக்ஷ்மிக்கு உகந்த நாள். தேவியர் அனைவருக்குமான விசேஷமான நாள். சுக்கிரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை என்று அர்த்தம். வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானின் ஆட்சி பூரணமாக நிறைந்திருக்கும் நாள். சுக்கிர பகவானின் அருள் வேண்டுமெனில், மகாலக்ஷ்மி வழிபாடு மிக மிக அவசியம்.

ஏகாதசி பெருமாளுக்கு உகந்தது என்றால், சுக்கிரவாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமை, மகாலக்ஷ்மி தாயாருக்கு உகந்தது. ஆக, பெருமாளுக்கு உகந்த ஏகாதசியும் தாயாருக்கு உகந்த வெள்ளிக்கிழமையும் இணைந்த அற்புதமான நன்னாள் இன்று.

இந்த மகோன்னதமான நன்னாளில், இருவரையும் வணங்குவோம். வீட்டில் விளக்கேற்றி, அவர்களை ஆராதிப்போம். மாலையில் வாசலிலும் பூஜையறையிலும் விளக்கேற்றிவைத்து மனதார வழிபாடுவோம்.

சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவோம். சுபிட்சம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். சகல செளபாக்கியங்களும் கிடைத்து இனிதே வாழலாம். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். வீட்டில் தடைப்பட்டிருந்த சகல மங்கல காரியங்களும் கோலாகலமாக நடந்தேறும்.

Related Posts

Leave a Comment