மார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்!

by Web Team
0 comment

தென்னிந்திய நடிகைகளுள் இன்னும் திருமணமாகாமல், பல ரசிகர்களைக் கொண்ட, அதே சமயம் ட்ரெண்டிலும் இருக்கும் ஓர் நடிகை தான் நயன்தாரா. இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது காலடியைப் பதித்தார். அன்று முதல் இன்று வரை இவருக்கு இருக்கும் ரசிகர்களின் பட்டாளம் மட்டும் குறையவில்லை. இவர் இடைப்பட்ட காலத்தில் ஒருசில பிரச்சனைகளால் சினிமா உலகிற்கு குட்-பை சொல்லியிருந்தாலும், மீண்டும் அசத்தலான திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்து, இன்று யாரும் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். இதற்கு இவரது மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையே காரணம் என்று கூறலாம்.

நடிகை நயன்தாரா

இன்று தனது 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் திரையுலகில் நுழைந்த ஆரம்ப காலத்தைத் விட, சமீப காலமாக மிகவும் அழகாகவும் செக்ஸியாகவும் இருக்கிறார். அதுவும் மார்டன் உடைகளை விட புடவையில் தான் நயன்தாரா மிகவும் கவர்ச்சிகரமாகவும், டக்கராகவும் உள்ளார். இக்கட்டுரையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவின் சில லேட்டஸ்ட் புடவைத் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அதில் எந்த தோற்றம் பிடித்துள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீல நிற புடவை

இது நடிகை நயன்தாரா நீல நிற புடவை அணிந்து, அதற்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து எடுத்த போட்டோ. இந்த புடவைக்கு நயன்தாரா ஆபரணங்களை அதிகம் அணியவில்லை. காதுகளுக்கு மட்டும் பெரிய காதணியை அணிந்திருந்தார்.

ஃப்ளோரல் புடவை

இது ரோஜா பூ பிரிண்ட் செய்யப்பட்ட புடவைக்கு பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கழுத்திற்கு ஆபரணங்கள் எதுவும் அணியாமல், சிம்பிளாக உட்கார்ந்தவாறு எடுத்த போட்டோ,

ப்ளாக் பியூட்டி

நயன்தாராவிற்கு கருப்பு நிற உடை மிகவும் அற்புதமாகவும், செக்ஸியாகவும் இருக்கும். இது விக்னேஷ் சிவன் பிறந்த நாளின் போது, நயன்தாரா அணிந்திருந்த கருப்பு நிற புடவை. இந்த புடவைக்கு இவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அட்டகாசமாக இருந்தது. வழக்கம் போல நயன்தாரா இந்த புடவைக்கும் ஆபரணங்களை அணியவில்லை.

மஞ்சள் நிற புடவை

இது நயன்தாரா மஞ்சள் நிற புடவைக்கு பிங்க் நிற ஜாக்கெட் அணிந்து, ஆபரணங்கள் அணியாமல், காதுகளுக்கு மட்டும் பெரிய வட்ட வடிவிலான காதணியை அணிந்து, கொண்டை போட்டு எடுத்த போட்டோ.

கிரே புடவை

இது கோல்டன் பார்டர் கொண்ட கிரே நிற புடவை அணிந்து நயன்தாரா விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது எடுத்த போட்அடோ. நயன்தாரா இந்த உடைக்கு அணிந்திருந்த ப்ளாக் மெட்டல் ஆபரணங்கள், இவருக்கு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

க்ரீம் நிற புடவை

இது மற்றொரு நிகழ்ச்சிக்கு க்ரீம் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு காலர் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ. இந்த புடவைக்கு இவர் முத்து மணிமாலையை அணிந்து வந்தது அற்புதமாக இருந்தது எனலாம்.

கருப்பு நிற புடவை இது பிலிம்பேர் விருது விழாவின் போது நடிகை நயன்தாரா கோல்டன் மற்றும் பச்சை நிறங்கள் கலந்த பார்டர் கொண்ட கருப்பு நிற புடவைக்கு, ஹை நெக் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

கிளி பச்சை பார்டர் புடவை

இது விருது விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, நயன்தாரா ஹை நெக் ஜாக்கெட் மற்றும் கிளி பச்சை நிற பார்டர் கொண்ட வெளிரிய ப்ரௌன் நிற உடை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

அடர் நீல நிற புடவை

இது வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, கோல்டன் பார்டர் கொண்ட அடர் நீல நிற புடவை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ. இந்த புடவைக்கும் நயன் ஹை-நெக் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த புடவைக்கும் ஆபரணங்கள் ஏதும் அணியவில்லை.

கருப்பு மற்றும் பிங்க் புடவை

இது ரெட் கார்பெட் நிகழ்ச்சி ஒன்றிற்கு பிங்க் பார்டர் கொண்ட கருப்பு நிற புடவைக்கு, கோடு போடப்பட் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கர்ல்ஸ் செய்யப்பட்ட ப்ரீ ஹேர் ஸ்டைல் மேற்கொண்டு வந்த போது எடுத்த போட்டோ.

Related Posts

Leave a Comment