இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாதுகாப்பு துறையில் தன்னிறைவு இந்தியா தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆயுதங்களை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா பல ஆண்டுகளாக உள்ளது. இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பாதுகாப்புத் துறையில் பெரும் திறனைக் கொண்டிருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதில் கவனம் செலுத்தவில்லை.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே சில ஆயுத தளவாட இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.