கே.ஜி.எப். 2-வில் இணைந்த பிரகாஷ் ராஜ்…. வைரலாகும் புகைப்படம்

by Web Team
0 comment

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் ஹீரோவாக நடிக்கும் கே.ஜி.எப் 2 படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2-ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு கடந்த 5 மாதங்களாக நடைபெறாமல் இருந்தது.

தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.ஜி.எப். 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. மேலும் நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். கே.ஜி.எப். 2 படப்பிடிப்பு தளத்தின் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Posts

Leave a Comment