குறுகியகால முதலீட்டுக்கு சரியான வழிகள் என்னென்ன? – சில ஆலோசனைகள்

by Web Team
0 comment

எந்த விஷயத்தைச் செய்தாலும், திட்டமிட்டுச் செய்ய வேண்டும்’ என்பார்கள். அது போலத்தான், முதலீட்டை ஆரம்பிக்கும் முன், முதலீட்டுக் காலத்தைத் தேர்ந்தெடுப்பதும். எந்தத் தேவைக்கு, எந்தக் காலத்தைத் தேர்வு செய்கிறோம் என்பதில் ஆரம்பித்து, அதை இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து செய்யும்போதுதான், ஒருவருடைய நிதித் தேவைகளை ஒருவரால் சரியாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்குப் பொருத்தமான கால அளவு தேவை. சரியான கால அளவிலான முதலீடு, எதிர்பார்க்கப்படும் வருமானத்தைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை மட்டுமல்லாது, முதலீட்டில் உள்ள ரிஸ்க்கையும் குறைத்துவிடும்.

குறுகிய காலம் என்பது 6 மாதம் – 1 வருடம் வரை, நடுத்தரகாலம் என்பது 3 – 5 வருடங்கள் வரை, நீண்டகாலம் என்பது 10 வருடங்களுக்குமேல் என முதலீட்டுக் காலமானது நிதி ஆலோசகர்களால் வகைப்படுத்தப்படுகிறது. முதலீட்டுக் காலத்தைப் போலவே, குறைந்த ரிஸ்க் தன்மை உடையவர்கள் (குறுகிய காலம்), நடுத்தர ரிஸ்க் தன்மை உடையவர்கள் (நடுத்தர காலம்) மற்றும் அதிக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்பவர்கள் (நீண்ட காலம்) என முதலீட்டாளர்களையும் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

குறுகியகால முதலீட்டுக்கு அல்லது குறைந்த அளவிலான ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள், தங்களின் தேவைக்கு அஞ்சலகச் சேமிப்பு, வங்கி டெபாசிட், கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகள் ஆகிய திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றில் தங்கம் சார்ந்த முதலீடுகளும் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது என்பதை மறக்க வேண்டும். பங்குச் சந்தையுடன் ஒப்பிடும்போது, தங்கம் பெரிய ஏற்ற இறக்கத்துக்கு உட்படாது. அதே வேளையில், அவற்றின் வருவாயும் குறைவாகவே இருக்கும்.

Related Posts

Leave a Comment