தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

by Web Team
0 comment

தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தளர்வுகள் அளித்து வருகிறது. பெரும்பாலானவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஓடிடி-யில் படத்தை வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது அல்ல. தியேட்டர்களை திறக்க சிறிது காலம் ஆவதால் ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதை விட பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்’’ என்றார்.

Related Posts

Leave a Comment