ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

by Web Team
0 comment

இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்கியது தொடர்பான தலைமை தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘சிஏஜி அறிக்கை எண் 20, 2019, நாடாளுமன்றத்தின் பட்
ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதாகயிருந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடை
பெறாத சூழலில் இது எதிர்வரும்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்’’ என கூறியுள்ளார்.

ரஃபேல் விமானங்கள் வாங்கியதன் மூலம் மக்களின் வரிப்பணம் கருவூலத்தில் இருந்து திருடப்பட்டு விட்டது என்று பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது குறை கூறினார். அந்த செய்தியில் ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராகுல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டர் பதிவில் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறும்போது, ‘‘ரஃபேல் விமான கொள்முதலில் குற்றச்சாட்டு தெரிவிப்பதன் மூலம் ராகுல் தனது தந்தை செய்த பாவத்துக்கு பரிகாரம் தேட முயல்கிறார். இது கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவாகத்தான் அமையும். சுயமாக அழித்து கொள்ள முயலும் போது நாங்கள் யாரிடம் புகார் கூற முடியும். ரஃபேல் கொள்முதல் விவகாரத்தை எடுத்துக் கொண்டு 2024 தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் எந்த அளவுக்கு சுயசார்புநிலையை எட்டி வருகிறது என்பது பட்டியலிடப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தனதுட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸைச் சேர்ந்த தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த மாதம் 5 விமானங்களை இந்நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கியுள்
ளது. இதுதொடர்பான தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment