சீன ஊடுருவலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தயார் – முப்படை தளபதி பிபின் ராவத் உறுதி

by Web Team
0 comment

லடாக்கில் சீனாவின் ஊடுருவலை எதிர்கொள்ளும் நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது என முப்படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

முப்படைகளின் தலைவர் பிபின்ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

லடாக்கில் சீனாவின் ஊடுருவலை எதிர்கொள்ளும் நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது. இந்தியா சீனா இடையே உயர்மட்ட அளவிலான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் அதனை செயல்படுத்த முடியும்.

இந்திய எல்லைப் பகுதியை ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஊடுருவலை தடுக்க இந்திய அரசு பெரும்பாலும் அமைதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment