மும்பை இந்தியன்ஸில் தோனியா? அப்படிலாம் விட முடியாது.. அம்பானிக்கே செக் வைத்த சிஎஸ்கே.. தரமான சம்பவம்

by Web Team
0 comment

மும்பை : தோனி மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதை எந்த கிரிக்கெட் ரசிகராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

ஆனால், அதற்கு ஒரு முயற்சி நடந்தது.

ஆம், இப்போது அல்ல. ஐபிஎல் துவங்கிய போது. 2008 ஐபிஎல் ஏலத்தில் தோனியை வாங்கியே தீருவோம் என சொல்லி அடித்த கில்லியாக களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்-உடன் மும்பை இந்தியன்ஸ் கடுமையாக போட்டி போட்டு இறுதியில் தோற்றது.

2008 ஐபிஎல் ஏலம்

2008 ஐபிஎல்-இல் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த ஜாம்பவான் வீரர் ஒருவரை அந்தந்த அணிகளில் நேரடியாக தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தது. சச்சின் டெண்டுல்கர் மும்பை அணிக்கு சென்றார். கங்குலி கொல்கத்தா அணியிலும், டிராவிட் பெங்களூர் அணியிலும் தேர்வு செய்யப்பட்டனர். யுவராஜ் சிங் பஞ்சாப் அணியிலும் தேர்வு செய்யப்பட்டனர்.

சொந்த அணி இல்லாத தோனி

தோனி ராஞ்சியை சேர்ந்தவர் என்பதால் எந்த அணியிலும் அவர் ஏலத்தில் விடப்பட்டார். அதே போல, சிஎஸ்கே அணிக்கும் எந்த ஜாம்பவான் வீரரையும் தேர்வு செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால், சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் முதலில் தோனியை வாங்கும் எண்ணத்தில் இல்லை.

சேவாக்கை விரும்பிய சீனிவாசன்

சேவாக் முதலில் ஜாம்பவான் வீரர் என்ற பிரிவில் இடம் பெறவில்லை. அதனால், அதிரடி வீரரான சேவாக்கை வாங்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். ஆனால், சிஎஸ்கே-வில் தேர்வுக் குழு தலைவராக இருந்த விபி சந்திரசேகர் வேறு கருத்தை கூறி உள்ளார்.

சிஎஸ்கே எடுத்த முடிவு

விபி சந்திரசேகர் தோனியை தேர்வு செய்யலாம் என கூறி உள்ளார். அது பற்றி விவாதம் நடந்து, பின்னர் சேவாக்கையும் வாங்க முடியாது என்ற நிலையில் தோனியை வாங்க முழு மனதாக முடிவு எடுத்தது சிஎஸ்கே அணி. ஏலத்தில் முதல் வீரராக ஷேன் வார்னே இடம் பெற்றார். ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது.

தோனி

ஏலம் அடுத்ததாக தோனியின் பெயர் வந்தது. அவரது அடிப்படை விலை இந்திய மதிப்பில் 3 கோடி. சிஎஸ்கே அணி துவக்கம் முதலே தோனிக்கு ஏலம் கேட்டது. எந்த வீரருக்கும் இல்லாத வகையில் மும்பை இந்தியன்ஸ் தவிர அனைத்து அணிகளும் தோனியை வாங்க போட்டி போட்டன.

Related Posts

Leave a Comment