ஐபிஎல்2020: டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணியினர் ஐக்கிய அரபு அமீரம் சென்றடைந்தனர்

by Web Team
0 comment

துபாய் விமானநிலையத்தில் செல்பி எடுத்துக்கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியினர்.

முகக்கவசம், ஃபேஸ் ஷீல்ட் அணிந்து கடுமையான பாதுகாப்புடன் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஐபிஎல் டி20 தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்தை இன்று சென்றடைந்தனர்.

செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் சீசன் டி20 போட்டி நடைபெறுகிறது. 3 நகரங்களில் 53 நாட்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டனர்.

இன்று டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளும் சென்றடைந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் அனைத்து அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் பயிற்சியைத் தொடங்க உள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக வீரர்களுக்கு கடுமையான பாதுகாப்பு கெடிபிடிகளும், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. மருத்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் தனிமைப்படுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் வீரர்கள் உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் சென்ற அனைத்து அணி வீரர்களும் தாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வருவதற்கு 6 நாட்களுக்கு அனுமதியில்லை. இந்த 6 நாட்களில் அவர்களுக்கு 3 கரோனா பரிசோதனைகள் முதல்நாள், 3-ம் நாள், 6-ம் நாளில் செய்யப்படும்.

இந்தியாவிலிருந்து புறப்படும் முன்பே வீரர்களுக்குப் பலமுறை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 6 நாட்களில் வீரர்கள் கரோனா தொற்று இல்லாமல் இருந்தால் மட்டும் அவர்கள் பயோ-பபுல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி திராஜ் மல்ஹோத்ரா கூறுகையில் “ கிரிக்கெட் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது, மீண்டும் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளோம். குடும்பத்தைப் போல் உணர்கிறோம், நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

டெல்லி அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது ஃகைப் கூறுகையில் “ ஐக்கி அரபு அமீரகத்தில் எங்களுக்கு 3 கரோனா பரிசோதனைகள் நடத்தப்படஉள்ளன. அனைவருக்கும் கரோனா நெகட்டிவாக வரும் என நம்புகிறோம். விரைவில் களத்தில் வந்து பயிற்சியில் ஈடுபடுவோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment