பீகார்: 65 வயது பெண்ணிற்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள்

by Web Team
0 comment

பாட்னா: பீகார் மாநிலத்தில் 65 வயது பெண் ஒருவர் கடந்த 18 மாதங்களில் 8 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: பீகார் மாநிலத்தில் பிரசவிக்கும் பெண்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தாய்மார்களுக்கு ரூ.1,400 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவி செய்யும் ஆஷா தொழிலாளர்களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.

மாநிலத்தின் முஷாபர்பூர் மாவட்டத்தில் மேற்கண்ட திட்டத்தில் மோசடி நடப்பதாக மாவட்ட நீதிபதிக்கு புகார் வந்தது. இதனையடுத்து விசாரணை நடத்திய பின்னரே பெரிய அளவில் மோசடி நடத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மேற்கண்ட திட்டத்தின் மூலம் மோசடிகள் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக இரண்டு பெண்களின் வயது மற்றும் அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் எண்ணிக்கை , பெற்றெடுத்த காலம் போன்றவை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன் படி முதலாவது பெண்ணான லீலாவதிக்கு வயது 65 அவர் கடந்த 18 மாதங்கள் அதாவது ஒன்றரை வருடங்களில் மட்டும் 8 குழந்தைளை பெற்றெடுத்துள்ளார். அதற்கான ஊக்கத்தொகையும் பெற்றுள்ளார். இரண்டாவது பெண் சபீனா கட்டூன் இவருக்கு வயது 59. இவர் 10 மணி நேர இடைவெளியில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து அதற்கான ஊக்கத்தொகையையும் தனது வங்கி கணக்கில் வரவுவைத்து கொண்டார். இவர்கள் குழந்தை பெற்ற விபரங்கள் அனைத்தும் மாநில அரசின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது பெண் லீலாவதியின் கடைசி மகனுக்கு21 வயது நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முசுஹாரி நகரத்தின் வங்கிஒன்றின் மேலாளர் சரஞ்சித் குமார் கூறுகையில் வங்கியின் (கஸ்டமர் சர்வீஸ் பாயிண்ட்) சிஎஸ்பி மையத்தின் ஆபரேட்டர் இதனை எப்படி நிர்வகித்தார் என்பது எனக்கு தெரியாது அவர்தான் இதைப்பற்றி சொல்ல முடியும் என கூறினார். இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் சி.எஸ்.பி.,ஆப்பரேட்டர் சுஷில் குமார் என்பவர் தலைமறைவாகி விட்டார்.

தலைமை மருத்துவ அதிகாரியான ஷைலேஷ் பிரசாத்சிங் கூறுகையில் இது மிகவும் தீவிரமான விசயமாகும் இது குறித்து எனது துறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தும் அதிகாரியை சந்தித்தேன் அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார் என கூறினார்.

Related Posts

Leave a Comment