டி.வி. நடிகை தற்கொலை வழக்கில் ஆண் நண்பர் கைது

by Web Team
0 comment

டி.வி. நடிகை தற்கொலை வழக்கில் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்தவர் சேஜல் சர்மா (வயது25). டி.வி. நடிகையான இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் அவர் தற்கொலை செய்யும் முன்பு தோழியுடன் பேசியது தெரியவந்தது. இதனால் தோழியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டெல்லியை சேர்ந்த நடிகையின் ஆண் நண்பர் ஆதித்யா (30) என்பவருக்கு இந்த தற்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதாவது நடிகையிடம் பில்லி சூனியம் செய்தால் விரைவில் பிரபலம் அடைந்து விடுவதாக கூறி ஆதித்யா பணமோசடி செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நடிகை சேஜல் சர்மா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் டெல்லி சென்று ஆதித்யாவை கைது செய்து அழைத்து வந்து தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட டி.வி நடிகை சேஜல் சர்மா கடைசியாக ‘தில் தோ ஹேப்பி ஜி’ என்ற தொடரில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment