பிரீபெயிட் சலுகைகளில் அதிரடி மாற்றம் செய்த ஏர்டெல்

by Web Team
0 comment

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் அதிரடி மாற்றம் செய்திருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் அதிரடி மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி ஏர்டெல் ரூ. 448, ரூ. 499, ரூ. 599 மற்றும் ரூ. 2698 உள்ளிட்ட பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வழங்கி வருகிறது.

தற்போதைய அப்டேட் மூலம் நான்கு ஏர்டெல் பிரீபெயிட் சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.

முன்னதாக ஏர்டெல் ரூ. 401 பிரீபெயிட் சலுகையுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சலுகை தற்சமயம் 28 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஏற்கனவே இந்த சலுகையில் 3 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கொண்டு ஏழு மல்டிப்ளெக்ஸ் திரைப்படங்கள், பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள், டிஸ்னி பிளஸ் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும். இந்த சேவைக்கான வருடாந்திர சந்தா ரூ. 399 ஆகும்.

ஏர்டெல் ரூ. 448 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், 28 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகையில் இதே பலன்கள் வழங்கப்படுகிறது. எனினும், இது முதல் முறை ஏர்டெல் சேவையில் இணைவோருக்கானது ஆகும்.

ஏர்டெல் ரூ. 599 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 2698 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment