அரசுடைமை ஆக்கப்பட்ட வேதா இல்லம் – தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு!

by SL1234-A
10 views

வேதா நிலையம் இல்லத்தில் இருந்து அசையா சொத்துக்களை எடுக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

வேதா நிலையம் அமைந்துள்ள 24 ஆயிரம் சதுர அடி நிலம், கட்டடம், மரங்கள் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாயை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது.

இந்நிலையில், வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரர் மகளும், அவரது சட்டப்பூர்வ வாரிசுமான தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வேதா நிலையம் இல்லத்தில் இருந்து அசையா சொத்துக்களை எடுக்க தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy