இரவில் தாய்ப்பால் கொடுத்த தாய்… காலையில் புளூ கலராக மாறி உயிரற்ற நிலையில் குழந்தை

by admin
390 views

அம்மா பீர் குடித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.. ஆனால் இது ஒன்றும் பெரிய தப்பில்லை என்று அமெரிக்காவின் மேரிலாண்ட் கோர்ட் சொல்லி உள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் கடந்த 2013-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண்ணின் பெயர் மூரியல் மாரிசன்.. இவருக்கு 4 மாத குழந்தை ஒன்று இருந்தது. சம்பவத்தன்று இவர் பேஸ்புக் பார்த்து கொண்டே இருந்தார்.. பிறகு பீர் எடுத்து குடித்துள்ளார்.. ஒருகையில் பீர், ஒரு கையில் செல்போன் என இரவெல்லாம் படுக்கையில் இருந்துள்ளார்.

இவருக்கு பக்கத்திலேயே கிடந்த குழந்தைக்கு டயபெர் மாற்றிவிட்டார்.. குழந்தை அழுததும் தூக்கி பால் கொடுத்தார்.. பிறகு அப்படியே தூங்கியும் விட்டார்.. மறுநாள் காலையில் பார்த்தால், குழந்தை செத்து கிடந்தது.. அதன் உதடு முழுக்க புளு கலரில் இருந்தது.

இதையடுத்து போலீசார் இதை பற்றி விசாரணை மேற்கொண்டனர்.. வழக்கு நீதிமன்றம் சென்றது.. இப்படி குடித்துவிட்டு தாய்ப்பால் தந்ததால்தான் குழந்தை இறந்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டு, அந்த தாய்க்கு 20 வருஷம் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், அந்த பெண்ணோ, இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.. தன் தண்டனையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மனுவின் பேரில் வழக்கு நடந்தது.. “அஜாக்கிரதையால்தான் குழந்தை இறந்துவிட்டது.. அப்படித்தான் இந்த கேஸை பார்க்க வேண்டும்.. இந்த தாய் பிளான் செய்து தன் குழந்தையை கொல்லவில்லை.. அதுவுமில்லாமல் குழந்தையுடன் தாய் தூங்கியது அந்த அளவுக்கு தப்பும் இல்லை.. ஒரு பீர் குடிச்சிட்டு, 4 மாத குழந்தையின் பக்கத்தில் தூங்குவதனாலேயே குழந்தையை சாகடிக்க முடியாது” என்று மேரிலாண்ட் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் சொன்னார்கள்.. இதற்கு அந்தம்மா விடுதலை செய்யப்பட்டார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy