பெற்ற தந்தை, கட்டிய கணவரால் சொத்திற்காக துரத்தப்பட்ட பிரபல நடிகை.. வீட்டில் அடைந்து கிடப்பதற்கு இதுதான் காரணமா?

by admin
320 views

90 களில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கனகா. பிரபல நடிகையான தேவிகாவின் மகளாக சினிமாத்துறையில் கங்கை அமரன் இயக்கிய ’கரகாட்டக்காரன்’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கமிட்டாகி நடித்தார்.

பல படங்களில் நடித்த கனகா 2000 ஆண்டோடு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இதற்கு காரணம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைதான். அதன்பின் உடல்நிலை குறைவால் அவதியுற்றார். இறந்தார் என்று சிலர் வதந்தியை ஏற்படுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்து பேட்டியும் கொடுத்திருந்தார்.

இதற்கு எல்லாம் காரணம் என் தந்தை தேவதாஸ் தான். என் தாய் தேவிகாவை விபச்சாரி என்றும், என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் டிரக் அடிக்ட் என்றும் கூறினார். கடந்த வருடங்களாக என்னை அறியாமல் பல வதந்தியால் கஷ்டப்பட்டேன். இதற்கு முற்றிபுள்ளி வைக்கத்தான் நான் பேட்டி கொடுத்து பேசியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் திருமணம் செய்த கணவர் எனக்கு புற்றுநோயோ இருப்பதை எண்ணி என்னை யார் என்று தெரியாது என துரத்தி அனுப்பினார். அம்மா தேவிகா அந்த காலத்தில் சேர்த்து வைத்த சொத்துக்களை அபகரிக்க என் தந்தையும் கணவரும் பல திட்டங்களை தீட்டி கொடுமை படுத்தினார்கள்.

தற்போது இவர்களுக்கு பயந்து நடிகை கனிகா அம்மா கட்டிய பங்களாவில் உள்தாழ்பாள் போட்டுக்கொண்டு ஏழு ஆண்டுகளாக தனிமையில் இருந்து வருகிறார். இதுபற்றி சினிமா பிரபலங்களுக்கு கூட தெரியாமல் பார்த்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடிகை கனிகாவுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவர் அவரை நடிகர் சங்க தேர்தலின் போது ஓட்டுப்போடும் போதுதான் பார்த்தேன். அதன்பின் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy