13 வயதில் கர்ப்பமானதால் கேலிக்கு ஆளான சிறுமி! DNA பரிசோதனையில் சிக்கிய இளைஞன்… தலைசுற்றவைக்கும் சம்பவம்

by admin
29 views

பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Heywood நகரை சேர்ந்தவர் Daniel Maughan (29). இவருக்கு 13 வயது சிறுமி ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் கடந்த 2018ல் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இப்படி சில முறை அந்த சிறுமியிடம் Daniel நடந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2019 ஜனவரி மாதத்தில் இருந்து சிறுமிக்கு மாதவிடாய் வருவது நின்றுள்ளது.

இதோடு மிகவும் சோர்வாக இருந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டது.

இது குறித்து தாயாரிடம் பேசிய சிறுமி Daniel தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் கூற அவர் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் கொடுத்தார்.

பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதன்பிறகு பள்ளிக்கு சிறுமி சென்ற போது பலரும் அவர் கர்ப்பத்தை கிண்டலடித்து கருக்கலைப்பு என கத்தினார்கள்.

இதை தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட Daniel-ஐ பொலிசார் கைது செய்து விசாரித்த போது தன் மீதான குற்றத்தை அவர் மறுத்தார்.

ஆனால் DNA பரிசோதனையில் அவர் தான் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என தெரியவந்தது.

Daniel மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாழ்நாள் பாலியல் குற்றவாளியாக கையெழுத்திடவும் உத்தரவிடப்ப்ட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் போது நீதிபதி கூறுகையில், உங்களின் மோசமான செயல் சிறுமியின் வாழ்க்கையில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் கருக்கலைப்பு என்ற வார்த்தையை கூறி அவர் மனதை பலரும் புண்படுத்தி, தன்னம்பிக்கையை இழக்க செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy