தமிழில் ஸ்ரீ அனுமன் புகழ்மாலை

by admin
31 views

மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளீர்
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல்தக்கீர்
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்
ஆலம் நுகர்ந்தானாம் என வெம்போர் அடர்கிற்பீர்

வெப்புறு செந் தீ நீர் வளியாலும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்
ஒப்புறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே
குப்புறின் அண்டத்தப் புறமேயும் குதிகொள்வீர்

நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீரச்
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர்
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே
கொல்லவும் வல்லீர் தோள் வலிஎன்றும் குறையாதீர்

மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர்
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்
சூரியனைச் சென்று ஒண்கையகத்தும் தொட வல்லீர்

அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறழியாமை
மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்
பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க
எறிந்துழி இற்றோர் புன் மயிரேனும் இழவாதீர்

போர்முன் எதிர்ந்தால் மூஉலகேனும் பொருள் ஆகா
ஒர்வில் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்
பாருலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்
தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்

நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
மாதர் தவம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்
ஓதி யுணர்ந்தீர் ஊழி கடந்தீர் உல கீனும்
ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்

அண்ணல் அம் மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே
கண்ணி உணர்ந்தீர் கமுமம் நுமக்கே கடன் என்னத்
திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்

அடங்கபும் வல்லீர்காலமது அன்றேல் அமர்வந்தால்
மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர் மதி நாடித்
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
இடங்கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடை யாதீர்

ஈண்டிய கொற்றத் திந்திரன் என்பான் முதல் யாரும்
பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்
பண்டிதர் நீரே பார்த்தினிது உய்க்கும்படி வல்லீர்
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்

ஏகுமின் ஏகி எம்முயிர் நல்கிஇசைகொள்ளீர்
ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னம் குறைவு இல்லாச்
சாகரம் முற்றும் தாவிமும் நீர் இக்கடல் தாவும்
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy