கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். அவசியம் படியுங்கள்!

by admin
56 views

இந்த ஆறு மாதத்தில் பலர் உயிர் இழந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான். ஆனால் யோசித்து பார்த்தால் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னது போல் உலகில் அக்கிரமங்கள் மிக அதிகமா க பெருகும்போது இறைவன் ஏதோ ஒரு வடிவில் பாடம் புகட்டுவார் என்று தெரிகிறது.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் மனிதன் அடிக்கலாம். ஆனால் ஒரு கல்லில் மில்லியன் மாங்காய் அடிக்க கடவுளால் மட்டுமே முடியும்..

கொரோனா என்ற கல்லினால் அடித்திருக்கிறான் இறைவன்..

எத்தனை பேருக்கு பாடம் புகட்டியிருக்கிறான்..

கொள்ளை அடித்த திருமண மண்டபத்தார், கேட்டரிங் ஏஜென்ட்கள் ஆட்டோ ஓட்டுனர்கள், பேராசை பிடித்த சிறு மற்றும் பெரு வியாபாரிகள், வீட்டு வேலைகளை காரணமின்றி செய்ய மறந்த /மறுத்த பெண்கள், வீட்டில் இருக்கும் உழைக்கும் பெண்களின் அருமை புரியாத ஆண்கள், அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு நல்ல எஜமானர்களை மதிக்காத வேலைக்காரர்கள், பெண்களை போக பொருளாய் நினைத்து பலாத்காரம் செய்த கயவர்கள், பொது ஜனங்களை முட்டாள்கள் ஆக்கிய சினிமாக்காரர்கள்.., அநியாயத்துக்கு விலை ஏற்றிய ஹோட்டல்கள், ஒன்றுக்கும் உதவாத ஆடம்பர மால்கள் என்று சொல்லிகொண்டே போகலாம்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதும் வெளி நாட்டு மோகத்துடன் இருப்பதும், நாம், செய்த தவறல்லவா?

பொது முடக்கத்தில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கலாம் . ஆனால் அம்பானி வீட்டிலும் அடுப்பெரிய வேண்டியிருக்கிறதே.

விவசாயம் நின்று போனால்??? இருக்கும் பொருட்களை வைத்து எவ்வளவு காலம் தள்ள முடியும்?

இந்த வைரஸ் சுத்தமாக/சுகாதாரமாக இருக்க மட்டும் கற்று தரவில்லை….

 • வேளாண்மை, கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் தர
 • அவரவர் வேலையை அவரவர் செய்ய
 • சோம்பலை ஒழிக்க
 • அவசிய தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்க
 • அதிக விலை விற்கும் பொருட்களை எப்பொழுதும் ஒதுக்கி தள்ள
 • ஆடம்பரத்தை ஒழிக்க
 • குடும்ப அமைப்பிற்கு முக்கியத்துவம் தர
 • மனித நேயம் வளர்க்க
 • நாட்டு பற்றுடன் இருக்க
 • எதிர்கால தலைமுறையை நல்ல முறையில் வளர்க்க
 • உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள
 • வெளி நாட்டு மோகத்தை தவிர்க்க
 • அறிவியல் வளர்ச்சியை எந்த அளவு பயன் படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்ள
 • எந்த மாற்றங்கள் வந்தாலும், எத்தனை வருடங்கள் சென்றாலும் அடிப்படையாக நம் முன்னோர்கள் காட்டிய ஒழுக்கமான வாழ்வியலை மறக்காமல் கடை பிடிக்க, அதை அடுத்த தலைமுறைக்கும் கற்று தர இன்னும் பலவும்…… கற்று தந்திருக்கிறது..

இந்த பாடங்களை கற்றால் கொரோனா என்ன… எந்த கொம்பன் வந்தாலும் நாம் பயம் கொள்ள தேவை இல்லை. எது வந்தாலும் அதை சமாளிக்கும் வழி உடனடியாக கிடைத்துவிடும்.. கற்றுக்கொள்வோமா??

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy