அண்டவெளியில் பெரும் அதிசயம்! 6800 வருடங்களுக்கு பிறகுதான் இதனை காண வாய்ப்பு

by Gokila Suresh
44 views

உலகம் முழுக்க தற்போது தெரிந்து கொண்டிருக்கும் #NEOWISE எனும் “வால் நட்சத்திரம்” வடமேற்கு திசையில் ஜூலை 14 முதல் அடுத்த 20 நாட்களுக்கு சூரியன் மறைந்த பின் தென்படும். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். இதனை இன்னும் 6,800 ஆண்டுகளுக்கு பார்க்கவே முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது.

ஏனெனில் அதன் சுற்றுவட்டப்பாதை மிக நீளமானது.இனிமேல் 6800 வருடங்களின் பின்னர்தான் அதனை மீண்டும் காண முடியும்.

வானில் வடமேற்குப் திசையில் சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் இந்த வால் நட்சத்திரம் தெரியும். இந்த வால் நட்சத்திரம் கடந்த ஜூலை 3 ஆம் தேதியில் இருந்து பூமிக்கு அருகே மிக வேகமாக வரும் என்று ஏற்கனவே நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

வெறும் கண்ணில் பார்க்கும்போது உங்களுக்கு அருகில் எங்கும் விளக்கு எரியக் கூடாது(வெளிச்சம் இருக்கக்கூடாது), சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் சுமார் 20 முதல் 45 நிமிடங்கள் காத்திருந்து இந்த வால் நட்சத்திரத்தைக் காண வேண்டும்

வெறும் கண்ணில் பார்க்கும்போது தெளிவாக தெரியாது. டெலஸ்கோப்பில் பார்க்கும்போது மிக தெளிவாக அதனை பார்க்க முடியும்.

இந்த வால் நட்சத்திரம் பாதி நீராலும், பாதி தூசுனாலும் ஆனது. 13 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் அளவிற்கு இந்த நட்சத்திரத்தில் தண்ணீர் இருக்கும்.

இது பூமியில் இருந்து சுமார் 70 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. ஒரு வினாடிக்கு 40 மைல் தூரத்திற்கு இது பயணிக்கும். இந்த நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நீங்களும் இன்னும் சில நாட்களுக்கு நவீன கமெராக்கள் அல்லது டெலஸ்கோப் மூலம் இதனை கண்டு ரசிக்க முடியும்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy