வெளிநாட்டில் மரவேலை பார்த்து வந்த இளைஞனுக்கு ஒரே புகைப்படத்தால் அடித்த அதிர்ஷ்டம்! என்ன நடந்தது தெரியுமா?

by admin
46 views

சவுதி அரேபியாவில் மரவேலை பார்த்து வந்த பாகிஸ்தானியர் இளைஞர் ஒருவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக இப்போது, அவர் மொடலாக மாறியுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த மரவேலை பார்க்கும் Muhammad Waqas என்ற 24 வயது இளைஞன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கார்பெண்ட்டர்(மரவேலை) வேலைக்காக வந்தார்.

தொடர்ந்து அந்த வேலை செய்து வந்த அவர் தான் இப்போது ஒரு நிறுவனத்திற்கு மொடலாக மாறியுள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் தச்சு வேலை செய்வதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா வந்தேன்.

Image Credit: Twitter

நான் அப்போது ஒரு மொடலாக வருவேன் என்று நினைத்து பார்த்ததில்லை. ஆனால் ஆசை இருந்தது. இந்நிலையில் தான், ஒரு நாள் என்னுடைய நண்பர், புகைப்படங்களை அழகாக்குவது, திருத்துவதைக் கண்டேன்.

நான் அப்போது அவரிடம், நான் என்னுடைய சிறுவயதில் இருந்தே, மொடல் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை, ஆனால் பாகிஸ்தானில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவரிடம் சொன்னேன்.

அவர், என் புகைப்படத்தை, அவருடைய நண்பருக்கு அனுப்பினார். அதன் பின் மொடலிங் துறையில் இளைஞருக்கு வாய்ப்பு கிடைக்குமாறு, என்னுடைய நண்பரின் ஸ்கிரீன் ஷாட் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

கடந்த ஜுலை 1-ஆம் திகதி @ tamimi1_1 ஸ்கிரீன் ஷாட், 33,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று வருகிறது. பயனர் @ tamimi1_1 மொடலை தேடும் ஏஜென்சிகளைக் கேட்டார்

இந்த அழகான மனிதர் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்பும் பிராண்டுகள், என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று அதில் குறிப்பிட்டார்.

இதையடுத்து மொடலாகியதாக கூறியுள்ளார். தற்போது சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட ஆடை தயாரிக்கும் நிறுவத்திற்கு Muhammad Waqas மொடலிங்காக உள்ளார்.

இதற்காக தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தை புதுப்பித்து, தன்னுடைய புதிய போட்டோஷுட்களை எல்லாம், அந்த பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது வரை டுவிட்டரில் மட்டும் அவரை 19,300 பேர் பின் தொடர் துவங்கியுள்ளனர்.

இந்த சமூகவலைத்தளம் மூலம் பலரின் வாழ்க்கை மாறியுள்ளது போல், இப்போது இந்த இளைஞனின் வாழ்க்கையும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy