திடீர் உடல் நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம்! கடும் பரபரப்பினை ஏற்படுத்திய காணொளி

by admin
328 views

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கலக்கியவர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சிறுநீரக பிரச்சனை காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் கமல் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை முழுமையாக ஏற்று கொண்டுள்ளார். மேலும் பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் கமலே ஏற்றுகொண்டுள்ளார்.

பொன்னம்பலம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy